EDUCATE & ILLUMINATE

‘கற்பது தமிழே’

14.10.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சென்னையில் அமைந்துள்ள 5 எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியைச் சார்ந்த 6 முதல் 10 வகுப்பு வரை எடுக்கும்  தமிழாசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நேரடியாகவும் மற்ற எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழியிலும்  எஸ்.பி.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளையின் ஷார்பன் தலைமையாசிரியர் திருமதி. ஜார்ஜினா பிரேம்குமார் அவர்கள் “கற்பது தமிழே” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

     14.10.2023 அன்று காலை கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. திருமதி. சுகந்தி அவர்கள் வரவேற்புரையுடன் முதல் கருத்தாளர் திருமதி. ஜோதிலட்சுமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்ததாக செல்வி. சாந்தா இரண்டாம் கருத்தாளர் வே. ராஜா அவர்களை அறிமுகப்படுத்தினார்.

     கருத்தரங்கில் திருமதி. ஜோதிலட்சுமி அவர்கள், மாணவர்களில் மூன்று நிலைகளில் உள்ளனர். அரும்பு (எழுத்துகள் மட்டும் அறிந்த நிலை) மொட்டு (சொற்களை அறிந்து படிக்கும் நிலை) மலர் (நன்றாக வாசிக்கும் நிலை) இப்படி மாணவர்களின் நிலையினை அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளைக் கொடுக்கச் சொன்னார்.

      பிறகு இருவரும் பல செயல்பாடுகளை மாணவர்களுக்குக் கொடுப்பது போல் ஆசிரியர்களுக்குக் கொடுத்து, ஆசிரியர்கள் அனைவரையும் அதில் பங்கேற்கச் செய்தமை அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. பயிற்சியில் பார்வையாளர்களாக இல்லாமல் நாங்கள் அனைவரும் அதில் பங்கேற்றதால், மாணவர்களுக்கு அதை எப்படிக் கொடுக்கலாம் என்ற வழிமுறை எங்கள் மனதில் நன்றாகப் பதிந்தது. மிகவும் பயனுள்ள ஒரு கருத்தரங்காக அமைந்தது.

SBIOA Educational Trust

The State Bank of India Officers’ Association (Chennai Circle) whose motto is “Service Before Self” is a registered Trade Union of S.B.I. Officers working in the State of Tamilnadu and U.T. of Pondicherry. The State Bank of India Officers’ Association Educational Trust was sponsored in the year 1978 by the Association and it started educational institutions for the benefit of Officers’ children and to serve the society. This service is given irrespective of caste, creed or colour.               

 

Contact Us

No-18, School Road, Anna Nagar West Extension Chennai - 600101.

Call Us

04426152814

Mail Us

sbioaetaa@gmail.com

@ 2023 All Rights Reserved | Design and Developed By