எழுதிப் பழகுவோம்
November 19, 2025 2026-03-20 9:49எழுதிப் பழகுவோம்
எழுதிப் பழகுவோம்
ஷார்பன் அகாடமி நடத்திய தமிழ் ஆசிரியர்களுக்கான மாதிரி வகுப்பு
தலைப்பு : எழுதிப் பழகுவோம்
இடம் : எஸ்.பி.ஓ.ஏ. இளநிலைக் கல்லூரி, சென்னை
நாள் : 30.08.2023
நேரம் : மாலை 3.45
உயர்திரு டாக்டர் சுந்தரராமன் அவர்களின் தலைமையில் “எழுதிப் பழகுவோம்” என்ற தலைப்பில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு சிறப்புப் பட்டறை வகுப்பு நடைபெற்று சிறப்பாக அமைந்தது.
பட்டறையில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது:
தேர்வு என்பது எழுத்து முறை.
தமிழுக்கு அடிப்படை எழுத்துகளே ஆதாரம்.
பெயர் எழுதப் பழகுவோம்.
வகுப்பு, பிரிவு எழுதப் பழகுவோம்.
பள்ளியின் பெயர் எழுதப் பழகுவோம்.
முகவரி எழுதப் பழகுவோம்.
கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பின் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வக் குறைவு.
எழுத்துத் தெளிவே கருத்துத் தெளிவு.
ஆசிரியர் எழுதும் முன்னுதாரணம் மாணவர்களுக்குத் தேவையானது.
இந்தப் பட்டறை மிகச் சிறந்த அறிவூட்டும் மற்றும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் எழுத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாணவர்களிடம் எழுதும் பழக்கத்தை உருவாக்கும் உறுதியுடன் பங்கேற்றனர்.